அச்சுவேலியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் கொலை: குற்றவாளிக்கு மூன்று மரண தண்டனைகள்

அச்சுவேலியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் கொலை: குற்றவாளிக்கு மூன்று மரண தண்டனைகள்

அச்சுவேலியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் கொலை: குற்றவாளிக்கு மூன்று மரண தண்டனைகள்

எழுத்தாளர் Bella Dalima

30 Mar, 2017 | 3:44 pm

யாழ்ப்பாணம் – அச்சுவேலியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் குற்றவாளிக்கு யாழ். மேல் நீதிமன்றம் மூன்று மரண தண்டனைகளை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

2014 ஆம் ஆண்டு மே 4 ஆம் திகதி அச்சுவேலி கதிரிப்பாய் பகுதியில் ஒரே குடும்பத்தின் மூவரைக் கொலை செய்தமை, மேலும் இருவரைத் தாக்கி காயப்படுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்த ஒருவருக்கே நீதிமன்றம் இந்த தண்டனையை விதித்துள்ளது.

மூன்று பேரைக் கொலை புரிந்தமைக்காக மூன்று மரண தண்டனைகளும், நபர்களைக் காயப்படுத்தியமைக்காக 14 வருட சிறைத்தண்டனையும் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனால் விதிக்கப்பட்டது.

அத்துடன், குற்றவாளி காயமடைந்த இருவருக்கும் இழப்பீடாக தலா ஒரு இலட்சம் ரூபா அபராதம் செலுத்த வேண்டும் எனவும் நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

குற்றவாளி ஒருவருக்கு மூன்று மரண தண்டனைகள் விதிக்கப்பட்டமை யாழ். மேல் நீதிமன்ற வரலாற்றில் இதுவே முதற்தடவை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்