வகுப்புத்தடை விதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நீதி கோரி யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

வகுப்புத்தடை விதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நீதி கோரி யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

வகுப்புத்தடை விதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நீதி கோரி யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

எழுத்தாளர் Staff Writer

29 Mar, 2017 | 1:26 pm

வகுப்புத்தடை விதிக்கப்பட்டள்ள 14 மாணவர்களுக்கு நீதி கோரி யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கலைப்பீடத்திற்கான புதுமுக மாணவர்களை வரவேற்கும் நிகழ்விற்கான ஏற்பாடுகளின் போது பல்கலைக்கழக சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டமை தொடர்பான விசாரணையின் போது விரிவுரையாளர்களுக்கு இழிவு ஏற்படுத்தும் வகையில் மாணவர்கள் செயற்பட்டதாக தெரிவித்து குறித்த 14 மாணவர்களுக்கும் நேற்று (28) முதல் வகுப்புத் தடை விதிக்கப்பட்டது.

எனினும் குறித்த தினத்தன்று பல்கலைக்கழகத்திற்கு சமூகமளிக்காத பல மாணவர்களுக்கு வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த மாணவர்களுக்கு நீதியான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் எனவும் தெரிவித்து ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

யாழ். பல்கலைக்கழக துணைவேந்தரின் அலுவலக வளாகத்தில் இன்று (29) காலை முதல் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகின்றது.

இதேவேளை தங்களின் கோரிக்கைக்கு தீர்வு கிட்டும் வரை வகுப்பு பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படும் என யாழ். பல்கலைக்கழகத்தின் கலைப்பீட மாணவர்கள் அறிவித்துள்ளனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்