லசந்த விக்ரமதுங்கவின் கொலைக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் வேனொன்று கைப்பற்றல்

லசந்த விக்ரமதுங்கவின் கொலைக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் வேனொன்று கைப்பற்றல்

லசந்த விக்ரமதுங்கவின் கொலைக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் வேனொன்று கைப்பற்றல்

எழுத்தாளர் Staff Writer

29 Mar, 2017 | 7:56 am

ஊடகவியலாளர்கள் கீர்த்நொயாரின் கடத்தல் மற்றும் சிரேஷ்ட ஊடகவிலலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை உள்ளிட்ட பல குற்ற செயல்களுக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் வேன் ஒன்று பிலியந்தலை பகுதியில் உள்ள வீடொன்னிறில் இருந்து குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்த குற்றச்செயல்கள் தொடர்பில் கைது செய்யப்பட்டிருக்கும் இராணுவ மேஜர் புலத்வத்த என்பவருக்கு நெருக்கமான பெண்ணொருவரின் வீட்டிலிருந்து இந்த வாகனம் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மாஅதிபர் பிரியந்த ஜெயக்கொடி குறிப்பிட்டுள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்