திருகோணமலையில் 5  மாணவர்கள் கொலை: வெளிநாடு சென்றுள்ள சாட்சியாளர்கள் குறித்து தகவலறியுமாறு உத்தரவு

திருகோணமலையில் 5  மாணவர்கள் கொலை: வெளிநாடு சென்றுள்ள சாட்சியாளர்கள் குறித்து தகவலறியுமாறு உத்தரவு

திருகோணமலையில் 5  மாணவர்கள் கொலை: வெளிநாடு சென்றுள்ள சாட்சியாளர்கள் குறித்து தகவலறியுமாறு உத்தரவு

எழுத்தாளர் Staff Writer

29 Mar, 2017 | 2:07 pm

திருகோணமலையில் 5 மாணவர்கள் படுகொலை செய்யப்பட்ட வழக்கின் வெளிநாடு சென்றுள்ள சாட்சியாளர்கள் குறித்து தகவலறியுமாறு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

திருகோணமலை நகர சபைக்கு அருகிலுள்ள கடற்கரையில் பாதுகாப்புத் தரப்பினரால் 5 மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டதாக கூறப்படும் வழக்கு திருகோணமலை நீதவான் எம்.எச்.எம். ஹம்ஸா முன்னிலையில் இன்று (29) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

முறைப்பாட்டாளர் தரப்பு சாட்சியாளர்களில் 4 ஆம் மற்றும் 8 ஆம் சாட்சியாளர்கள் இன்றைய தினம் நீதிமன்றத்திற்கு சமூகமளிக்கவில்லை என இந்த வழக்கில் ஆஜரான அரச தரப்பு சட்டத்தரணி டிலான் ரத்னாயக்க நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.

அத்துடன் இந்த சாட்சியாளர்கள் இருவரும் வெளிநாடு சென்றுள்ளதாக சுட்டிக்காட்டிய அரச சட்டத்தரணி, சாட்சிகளை நெறிப்படுத்துவதற்கு இடமளிக்கும் வகையில் காலஅவகாசம் வழங்குமாறும் இதன்போது நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.

இந்த விடயங்களை ஆராய்ந்த திருகோணமலை நீதவான் எம்.எச்.எம். ஹம்ஸா. வெளிநாடு சென்றுள்ள சாட்சிகள் தொடர்பாக சம்பந்தப்பட்ட தூதரகங்களுடன் தொடர்புகொண்டு அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்