ஒபாமாவின் சுற்றுச்சூழல் ஆணை, பாரிஸ் உலக சுற்றுச்சூழல் உடன்படிக்கையை கைவிட்டார் ட்ரம்ப்

ஒபாமாவின் சுற்றுச்சூழல் ஆணை, பாரிஸ் உலக சுற்றுச்சூழல் உடன்படிக்கையை கைவிட்டார் ட்ரம்ப்

ஒபாமாவின் சுற்றுச்சூழல் ஆணை, பாரிஸ் உலக சுற்றுச்சூழல் உடன்படிக்கையை கைவிட்டார் ட்ரம்ப்

எழுத்தாளர் Bella Dalima

29 Mar, 2017 | 3:13 pm

அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமாவின் சுற்றுச்சூழல் ஆணையையும், பாரிஸ் உலக சுற்றுச்சூழல் உடன்படிக்கையையும் கைவிடுவதாக அதிபர் ட்ரம்ப் தேர்தல் பிரச்சாரத்தின்போது அறிவித்தார்.

வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக நேற்று (28) புதிய ஆணையில் கையெழுத்திட்டார்.

இந்த வரலாற்று ஆணையில் கையெழுத்திட்டதின் மூலம், அமெரிக்க எரிசக்தித்துறை மீதிருந்த தடைகளை நீக்கியுள்ளதாகவும் அரசின் தலையீடுகளை நீக்கி, வேலைவாய்ப்புக்களை உருவாக்கும் சூழலை ஏற்படுத்தியுள்ளதாகவும் ட்ரம்ப் தெரிவித்தார்.

வெள்ளைமாளிகை அதிகாரி ஒருவர், அதிபர் ட்ரம்ப் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதும், பொருளாதாரத்தை வளர்ப்பதும் ஒன்றையொன்று சார்ந்த விடயங்களல்ல என்று நம்புவதாக தெரிவித்தார்.

இப்புதிய ஆணை பொருளாதார வளர்ச்சியையும், வேலைவாய்ப்பையும் பாதிக்காமல் தூய காற்று, குடிநீரைக் காப்பாற்றுவதை உறுதி செய்யும் எனவும் அமெரிக்க மண்ணில், அமெரிக்க தொழில்நுட்பம், அமெரிக்க கட்டமைப்பினைக் கொண்டு அமெரிக்க எரிசக்தியை ஏற்றுமதி செய்ய வழிவகுக்கும் என்றும் அனைத்து தயாரிப்புகளும் அமெரிக்காவிலேயே நடைபெற வேண்டும் என்றும் டிரம்ப் வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில், அமெரிக்கா முழுதும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், இந்த ஆணை பத்தாண்டுகளாக சுற்றுச்சூழலையும் காப்பாற்றி, வேலைவாய்ப்பையும், பொருளாதார வளர்ச்சியையும் பாதிக்காமலிருக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை பின்னால் தள்ளி விடும் என அறிவுறுத்தி வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்