அதிகாரப்பரவலாக்கல் மூலம் அரசியல் தீர்வு: அரசியற்கட்சிகள் ஒத்துழைப்பதாக பிரதமர் தெரிவிப்பு

அதிகாரப்பரவலாக்கல் மூலம் அரசியல் தீர்வு: அரசியற்கட்சிகள் ஒத்துழைப்பதாக பிரதமர் தெரிவிப்பு

எழுத்தாளர் Bella Dalima

29 Mar, 2017 | 6:32 pm

ஒன்றிணைந்த நாட்டிற்குள் அதிகாரப்பரவலாக்கல் மூலம் அரசியல் தீர்வை வழங்குவதற்கு அனைத்து அரசியற்கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்கியுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

மருதானையில் இன்று (29) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே பிரதமர் இதனைக் கூறினார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

[quote]நாட்டைப் பிளவுபடுத்தாமல் எவ்வாறு அதிகாரப்பரவலாக்கலை மேற்கொள்வது என்பதே முக்கியமான விடயமாகும். மாகாண சபைகளின் அதிகாரங்கள் தொடர்பிலும் நாம் சிந்திக்க வேண்டும். மாகாண சபைகளின் அதிகாரங்களில் திருத்தங்களை மேற்கொண்டு அதன் அதிகாரத்தை அதிகரிப்பது தொடர்பில் வடமாகாண சபை மாத்திரமல்ல, தெற்கில் முதலமைச்சர்களும் யோசனைகளை முன்வைத்துள்ளனர். சில விடயங்கள் தொடர்பில் எம்மால் இணக்கம் தெரிவிக்க முடிந்துள்ளது. அரசியல் ரீதியில் வங்குரோத்து அடைந்தவர்களே இன்று இனவாதம் பேசுகின்றனர்.[/quote]

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்