சவுதியில் உயிரிழந்த பெண்ணின் சடலம் கையளிப்பு: இறுதிக்கிரியைகள்  நடைபெற்றன

சவுதியில் உயிரிழந்த பெண்ணின் சடலம் கையளிப்பு: இறுதிக்கிரியைகள்  நடைபெற்றன

எழுத்தாளர் Bella Dalima

28 Mar, 2017 | 6:13 pm

சவுதி அரேபியாவில் கடந்த பல மாதங்களுக்கு முன்னர் உயிரிழந்த பெண்ணின் இறுதிக்கிரியைகள் இன்று நடைபெற்றன.

மஸ்கெலியா – ஸட்ரஸ்பி சூரியகந்த தோட்டத்தைச் சேர்ந்த பழனியாண்டி கற்பகவள்ளி எனும் 3 பிள்ளைகளின் தாய், சவுதியில் உயிரிழந்து பல மாதங்களின் பின்னர் நாட்டிற்கு சடலமாக அனுப்பி வைக்கப்பட்டார்.

2015 ஆம் ஆண்டு பணிப்பெண்ணாக சவுதி அரேபியாவிற்கு சென்றிருந்த அவர், ஒலெய்யா பபா எனும் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த நவம்பர் முதலாம் திகதி உயிரிழந்ததாக உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

உயிரிழந்த 41 வயதான கற்பகவள்ளியின் சடலத்தை நாட்டிற்கு கொண்டு வர அவரது உறவினர்கள் முயன்றபோதிலும், அது பலனளிக்கவில்லை.

இந்நிலையில், 5 மாதங்களின் பின்னர் கடந்த 25 ஆம் திகதி அவரின் சடலம் நாட்டிற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.

எனினும், சடலம் இன்று காலை உறவினர்களிடம் கையளிக்கப்பட்டதுடன், இறுதிக்கிரியைகள் இன்று காலை நடைபெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மாரடைப்பினால் கற்பகவள்ளி உயிரிழந்ததாக சவுதி அதிகாரிகள் தெரிவித்துள்ள போதிலும், மரணத்தில் சந்தேகம் நிலவுவதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected]lk இல் எங்களை தொடர்பு கொள்ளவும்