மக்களிடமிருந்து போதியளவு ஒத்துழைப்புகள் கிடைக்காமையே டெங்கு தீவிரமடைய காரணம்

மக்களிடமிருந்து போதியளவு ஒத்துழைப்புகள் கிடைக்காமையே டெங்கு தீவிரமடைய காரணம்

மக்களிடமிருந்து போதியளவு ஒத்துழைப்புகள் கிடைக்காமையே டெங்கு தீவிரமடைய காரணம்

எழுத்தாளர் Staff Writer

28 Mar, 2017 | 8:29 am

மக்களிடமிருந்து போதியளவு ஒத்துழைப்புகள் கிடைக்காமையே டெங்கு காய்ச்சல் மேலும் தீவிரமடையக் காரணம் என சுகாதாரத்துறை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்துவதற்காக சுகாதாரத் தரப்புகள் அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருவதாக சுகாதார அமைச்சின் செயலாளர் அனுர ஜயவிக்ரம குறிப்பிட்டார்.

இதுதவிர வேகமாகப் பரவிவரும் டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்துவதற்காக பயிற்சி பெற்ற தாதியர்களை பணிக்கு அமர்த்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

டெங்கு காய்ச்சலின் தாக்கம் அதிகரித்துள்ள பிரதேசங்களில் இவர்கள் கடமையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாகவும் சுகாதார அமைச்சின் செயலாளர் கூறினார்.

இதற்கிணைவாக டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்துவதற்காக மாகாண மட்டத்தில் நுளம்பு ஒழிப்பு உதவியாளர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.

இதேவேளை டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்ட 40 பேர் உயிரிழந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

இதுதவிர வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் 24562 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இவர்களில் கொழும்பில் மாத்திரம் 5838 பேர் பதிவாகியுள்ளனர்.

கம்பஹா மாவட்த்தில் 2965 பேரும் திருகோணமலை மாவட்டத்தில் 1745 பேரும் பதுவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

டெங்கு நுளம்புகளை ஒழிப்பதற்காக நாளை (29) முதல் தேசிய டெங்கு ஒழிப்பு வாரம் ஆரம்பமாகின்றது.

இதேவேளை, நாடு முழுவதும் இன்புளுயன்சா வைரஸ் தொற்றுக்குள்ளான நோயாளர்களில் ஓரளவு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தொற்று நோ ஆராய்ச்சிப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இந்த நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காக வைத்தியர்களுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கியுள்ளதாக அந்த பிரிவின் நிபுணர் டொக்டர் சமித கினிகே தெரிவித்தார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்