ஜப்பானில் பனிச்சரிவில் சிக்கி 8 மாணவர்கள் உயிரிழப்பு

ஜப்பானில் பனிச்சரிவில் சிக்கி 8 மாணவர்கள் உயிரிழப்பு

ஜப்பானில் பனிச்சரிவில் சிக்கி 8 மாணவர்கள் உயிரிழப்பு

எழுத்தாளர் Bella Dalima

28 Mar, 2017 | 4:13 pm

ஜப்பானில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 8 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.

தலைநகர் டோக்கியோவிற்கு 120 கி.மீ. தொலைவில் உள்ள டோச்சிகி மாவட்டத்தில் அமைந்துள்ள பனி படர்ந்த மலையில் ஏறுவதற்காக பல்வேறு இடங்களைச்சேர்ந்த 60 மாணவர்கள் சென்றுள்ளனர்.

நாஸூ எனும் பகுதியில் அவர்கள் மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்த போது, திடீர் பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது.

இந்த பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த 8 மாணவர்களின் சடலங்கள் மீட்புக் குழுவினரால் மீட்கப்பட்டுள்ளன.

காயமடைந்த மாணவர்கள் சிகிச்சைக்காக நாஸு நகரில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

பனி மலையேற்றம், பனிச்சறுக்கு விளையாட்டிற்கான பருவகாலம் முடிந்துவிட்டபோதிலும், சிலர் இன்னும் அதில் ஈடுபட்டு வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்