English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
28 Mar, 2017 | 6:22 am
2016 ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இன்று அதிகாலை வெளியிடப்பட்டுள்ளன.
பரீட்சைகள் திணைக்களத்தின் www.doenets.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக மாணவர்கள் பரீட்சைப் பெறுபேறுகளை பார்வையிட முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யூ.எம்.என்.ஜே. புஷ்பகுமார தெரிவித்தார்.
2016 க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்காக 551,340 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர்.
கொழும்பு மற்றும் ஶ்ரீஜயவர்தனபுர வலயங்களிலுள்ள பாடசாலைகளின் பெறுபேறுகள் இன்று (28) முற்பகல் 10 மணியின் பின்னர் பரீட்சைகள் திணைக்களத்தின் பாடசாலைப் பரீட்சை ஏற்பாட்டுப் பிரிவினால் அந்த வலயங்களிலுள்ள பாடசாலைகளின் அதிபர்களுக்கு மாத்திரம் விநியோகிக்கப்படவுள்ளன.
ஏனைய பாடசாலைகளுக்குரிய பரீட்சைப் பெறுபேறுகள் அடங்கிய ஆவணங்கள் இன்று (28) தபாலில் அனுப்பி வைக்கப்படும் என்றும், அனைத்து தனிப்பட்ட பரீட்சார்த்திகளின் பெறுபேறுகளும் விரைவில் தபாலில் சேர்க்கப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பரீட்சைப் பெறுபேறுகள் தொடர்பான சிக்கல்கள் இருப்பின் 1911 அல்லது பாடசாலைப் பரீட்சைகள் பிரிவின் 011 278 42 08 என்ற தொலைப்பேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு வினவமுடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பெறுபேறுகள் தொடர்பில் மீள்திருத்தம் செய்வதாயின், அடுத்த மாதம் 30 ஆம் திகதிக்குள் பரீட்சைகள் திணைக்களத்திற்கு விண்ணப்பிக்க முடியும்.
பாடசாலை பரீட்சார்த்திகளின் மீள்திருத்த விண்ணப்பங்களுக்கான முடிவுகள் பாடசாலைகளின் அதிபர்களுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, யாழ் இந்துக் கல்லூரி மாணவன் ஏ. அபிநந்தன் அகில இலங்கை ரீதியாக ஐந்தாம் இடத்தை மேலும் இரண்டு மாணவர்களுடன் பகிர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
24 Jan, 2021 | 02:26 PM
17 Jul, 2020 | 04:04 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS