கல்குடா மதுபான உற்பத்தி தொழிற்சாலை தொடர்பில் மக்கள் பிரதிநிதிகள் கருத்து

கல்குடா மதுபான உற்பத்தி தொழிற்சாலை தொடர்பில் மக்கள் பிரதிநிதிகள் கருத்து

எழுத்தாளர் Bella Dalima

28 Mar, 2017 | 10:04 pm

மட்டக்களப்பு – கல்குடாவில் நிர்மாணிக்கப்படும் மதுபான உற்பத்தி தொழிற்சாலை தொடர்பில் தொடர்ந்தும் சர்ச்சை நிலவுகின்றது.

இது தொடர்பில் மக்கள் பிரதிநிதிகளும் தமது நிலைப்பாடுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

வவுனியாவில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பிலும், பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிவமோகனிடம் கல்குடா மதுபான தொழிற்சாலை தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டது.

”நெல், சோளம் என்பதை வைத்து உற்பத்தி செய்வதாகத்தான் இந்தக் கம்பனி ஆரம்பத்தில் ஆரம்பிக்கப்படும். அதன் போர்வை அப்படிக் காட்டப்படும். ஆனால், இறுதியில் கன்டெய்னரில் ஸ்ப்ரிட் எடுத்து கலந்து வியாபாரம் செய்கின்ற கம்பனியாகத்தான் அது இயங்கும். எனவேதான் அங்கும் அந்த மக்கள் அதனை எதிர்க்கின்றார்கள்,”

என எஸ்.சிவமோகன் தெரிவித்தார்.

ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல் குறித்து வினவப்பட்டபோது, அச்செயற்பாடு ஜனநாயகத்திற்குப் புறம்பான செயற்பாடு எனவும் நல்லாட்சி அரசினால் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, வவுனியாவில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட வட மாகாண சுகாதார அமைச்சர் பா.சத்தியலிங்கம் கல்குடா மதுபான தொழிற்சாலை தொடர்பில் கருத்துத் தெரிவித்தார்.

காணொளியில் காண்க…


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்