ஒருவர் ஒரே அமைச்சுப் பதவியில் இருப்பது சிறந்தது: கபீர் ஹசீம்

ஒருவர் ஒரே அமைச்சுப் பதவியில் இருப்பது சிறந்தது: கபீர் ஹசீம்

எழுத்தாளர் Bella Dalima

28 Mar, 2017 | 10:19 pm

ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் கபீர் ஹசீம், சிறிகொத்த கட்சி தலைமையகத்தில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தார்.

கெம்பல் மைதானத்திலேயே இம்முறையும் கட்சியின் மே தினக் கூட்டம் இடம்பெறும் என இதன்போது குறிப்பிட்டார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு நிதி அமைச்சு வழங்கப்படலாம் எனவும் கபீர் ஹசீமிற்கு விவசாய அமைச்சு வழங்கப்படலாம் எனவும் கூறப்படும் கருத்து தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த கபீர் ஹசீம், ஒருவர் ஒரே அமைச்சுப் பதவியில் இருப்பது சிறந்தது எனவும் இதுபற்றி பிரதமரும் ஜனாதிபதியும் ஆலோசித்து வருவதாகவும் குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்