இலங்கை இராணுவம் உலகிலுள்ள ஒழுக்கமான இராணுவம் என்பது எனது தனிப்பட்ட கருத்து: மங்கள சமரவீர

இலங்கை இராணுவம் உலகிலுள்ள ஒழுக்கமான இராணுவம் என்பது எனது தனிப்பட்ட கருத்து: மங்கள சமரவீர

எழுத்தாளர் Bella Dalima

28 Mar, 2017 | 7:39 pm

வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஊடகவியலாளர் சந்திப்பொன்றை இன்று ஏற்பாடு செய்திருந்தார்.

இதன்போது யுத்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அமைச்சர் பின்வருமாறு தெளிவூட்டினார்,

[quote]இலங்கைக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலேயே நாம் அறிவோம். அது தொடர்பில் ஆராய்ந்து, அவை யுத்தக்குற்றங்களா என நாம் தீர்மானிப்போம். இலங்கை இராணுவம் உலகிலுள்ள ஒழுக்கமான இராணுவம் என்பது எனது தனிப்பட்ட கருத்து. எனினும், ஏனைய இராணுவங்களைப் போன்று எமது இராணுவத்திலும் தவறிழைப்பவர்கள் உள்ளனர். விசாரணைகளின் ஊடாக தவறிழைத்தவர்கள் உள்ளனர் என்பது நிரூபிக்கப்பட்டால், அது தொடர்பில் நாம் நடவடிக்கை எடுப்போம். அதன் ஊடாக எமது இராணுவத்தின் கௌரவத்தை நாம் பாதுகாப்போம். நீதிமன்றத்தின் ஊடாக யுத்தக்குற்றமா இல்லையா என தீர்மானிக்கப்படும்.[/quote]

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்