இலங்கைக்கு எதிராக ஹெட்ரிக் விக்கெட் வீழ்த்தினார் டஸ்கின் அஹமட்

இலங்கைக்கு எதிராக ஹெட்ரிக் விக்கெட் வீழ்த்தினார் டஸ்கின் அஹமட்

இலங்கைக்கு எதிராக ஹெட்ரிக் விக்கெட் வீழ்த்தினார் டஸ்கின் அஹமட்

எழுத்தாளர் Bella Dalima

28 Mar, 2017 | 7:26 pm

சர்வதேச ஒருநாள் போட்டியில் இலங்கைக்கு எதிராக ஹெட்ரிக் விக்கெட் வீழ்த்திய முதல் பங்களாதேஷ் வீரராகவும் உலகளாவிய ரீதியில் ஐந்தாவது வீரராகவும் டஸ்கின் அஹமட் பதிவானார்.

தம்புளையில் நடைபெறும் இரண்டாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அவர் இந்த மைல்கல்லை எட்டினார்.

தனது 200 ஆவது சர்வதேச ஒருநாள் போட்டியில் விளையாடும் உபுல் தரங்க, நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தார்.

சச்சித் பத்திரன, லஹிரு குமார, லக்ஷான் சந்தகென் ஆகியோர் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக நுவன் பிரதீப், நுவன் குலசேகர மற்றும் டில்ருவன் பெரேரா ஆகியோர் அணியில் இணைக்கப்பட்டனர்.

முதல் விக்கெட் 18 ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட்ட நிலையில் இணைந்த குசல் மென்டிஸ் மற்றும் உபுல் தரங்க ஜோடி இரண்டாம் விக்கெட்டுக்காக 111 ஓட்டங்களைப் பகிர்ந்தது.

உபுல் தரங்க 65 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க குசல் மென்டிஸ் தனது முதல் சர்வதேச ஒருநாள் சதத்தைக் கடந்தார்.

போட்டியின் கடைசி ஓவரை வீசிய டஸ்கின் அஹமட் ஹெட்ரிக் விக்கெட் வீழ்த்தி அனைவரையும் பிரமிப்பில் ஆழ்த்தினார்.

அவரது பந்துவீச்சில் அசேல குணரத்ன, சுரங்க லக்மால், லஹிரு குமார ஆகியோர் ஆட்டமிழந்தனர்.

இலங்கை அணி 49.5 ஓவர்களில் 311 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்