கொழும்பில் 5,000 இற்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவு

கொழும்பில் 5,000 இற்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவு

கொழும்பில் 5,000 இற்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவு

எழுத்தாளர் Staff Writer

27 Mar, 2017 | 2:37 pm

கடந்த 24 மணித்தியாலங்களில் டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்டவர்கள் என சந்தேகிக்கப்படும் 21 பேர் கிண்ணியா தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கிண்ணியா சுகாதார வைத்திய அத்தியட்சகர் அஜித் மொஹமட் மஜித் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் கிண்ணியா பகுதியில் கடந்த காலங்களில் காணப்பட்டதை விட தற்போது டெங்கு காச்சல் பரவும் வீதம் குறைவடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் 24,562 டெங்கு நோயாளர்கள் பதுவாகியுள்ளனர்.

அவர்களில் கொழும்பில் மாத்திரம் 5,838 பேர் பதுவாகியுள்ளதாக தொற்றா நோய் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை கம்பஹா மாவட்த்தில் 2,965 பேரும் திருகோணமலை மாவட்டத்தில் 1745 பேரும் பதுவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்