விடத்தல்தீவில் கடற்படையினரின் படகு மோதி மீ்ன்பிடி வள்ளம் கவிழ்ந்ததில் மீனவர் பலி: படையினருக்கு பிணை

விடத்தல்தீவில் கடற்படையினரின் படகு மோதி மீ்ன்பிடி வள்ளம் கவிழ்ந்ததில் மீனவர் பலி: படையினருக்கு பிணை

விடத்தல்தீவில் கடற்படையினரின் படகு மோதி மீ்ன்பிடி வள்ளம் கவிழ்ந்ததில் மீனவர் பலி: படையினருக்கு பிணை

எழுத்தாளர் Bella Dalima

24 Mar, 2017 | 7:32 pm

மன்னார் – விடத்தல்தீவு களப்பில் கடற்படையினரின் படகு மோதி மீ்ன்பிடி வள்ளமொன்று கவிழ்ந்ததில் மீனவர் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட கடற்படை உறுப்பினர்கள் இருவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் இருவரையும் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் இன்று மாலை ஆஜர்படுத்தியதை அடுத்து, நீதவான் ஏ.ஜி. அலெக்ஸ்ராஜா பிணை உத்தரவைப் பிறப்பித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், குறித்த மீனவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

விடத்தல்தீவு கடற்பகுதியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கடற்படையினரின் படகொன்று, மீன்பிடிக்க சென்று கரைக்கு திரும்பிய வள்ளத்துடன் மோதியதில் அனர்த்தம் இடம்பெற்றதாக பொலிஸார் இதற்கு முன்னர் தெரிவித்திருந்தனர்.

இந்த சம்பவம் நேற்றிரவு 8.20 அளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

இந்த சம்பவத்தில் விடத்தல்தீவு ஏழாம் வட்டாரத்தைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான தாசன் சில்மன் எனப்படும் 39 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் கடற்படையாலும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கடற்படைப் பேச்சாளர் லெப்டினன்ட் கொமாண்டர் சமிந்த வலாகுலகே தெரிவித்திருந்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்