மீனவர்கள், படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: மோடிக்கு எடப்பாடி கே. பழனிச்சாமி கடிதம்

மீனவர்கள், படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: மோடிக்கு எடப்பாடி கே. பழனிச்சாமி கடிதம்

மீனவர்கள், படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: மோடிக்கு எடப்பாடி கே. பழனிச்சாமி கடிதம்

எழுத்தாளர் Bella Dalima

24 Mar, 2017 | 3:30 pm

இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 26 மீனவர்கள், பறிமுதல் செய்யப்பட்ட 131 படகுகளை விரைவில் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிச்சாமி மீண்டும் கடிதம் அனுப்பியுள்ளார்.

பாக்கு நீரிணை பகுதியில் தங்கள் பாரம்பரிய மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் தமிழக மீனவர்களைக் கைது செய்வதை இலங்கை கடற்படையினர் வாடிக்கையாகக் கொண்டுள்ளதாக எடப்பாடி கே. பழனிச்சாமி குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்த கைதுகள் பல ஆண்டுகளாக தொடர்ச்சியாக இடம்பெறுவதாலும் படகுகளை விடுவிக்காததாலும் வாழ்வாதாரத்தை இழந்த தமிழக மீனவர்கள் விரக்தியில் உள்ளதாக அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, இந்த விடயம் தொடர்பில் நேரடியாகத் தலையிட்டு, உறுதியான நடவடிக்கை எடுக்க வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு உத்தரவிட வேண்டும் என எடப்பாடி கே. பழனிச்சாமி மோடியிடம் வலியுறுத்தியுள்ளார்.

நேற்று முன்தினம் (22) அதிகாலை வடபகுதி கடற்பரப்பினுள் பிரவேசித்து மீன்பிடித்த குற்றச்சாட்டின் பேரில் இந்திய மீனவர்கள் 16 பேர் கடந்த 22 ஆம் திகதி 10 மீனவர்களும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்