ஜனாதிபதி ஆணைக்குழுவினால் மஹிந்த ராஜபக்ஸவிடம் சாட்சியம் பதிவு

ஜனாதிபதி ஆணைக்குழுவினால் மஹிந்த ராஜபக்ஸவிடம் சாட்சியம் பதிவு

ஜனாதிபதி ஆணைக்குழுவினால் மஹிந்த ராஜபக்ஸவிடம் சாட்சியம் பதிவு

எழுத்தாளர் Bella Dalima

24 Mar, 2017 | 3:39 pm

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இன்று பாரிய ஊழல் மற்றும் மோசடிகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு வருகை தந்திருந்தார்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தினூடாக மேற்கொள்ளப்பட்ட தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக செலுத்தப்பட வேண்டியிருந்த 164 மில்லியன் ரூபா செலுத்தப்படாமை தொடர்பில் சாட்சியங்களைப் பதிவு செய்வதற்காக அவர் அழைக்கப்பட்டிருந்தார்.

இதற்கு முன் பல சந்தர்ப்பங்களில் சாட்சியங்களைப் பதிவு செய்வதற்காக முன்னாள் ஜனாதிபதி அழைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

எனினும், பல காரணங்களினால் தமக்கு சமூகமளிக்க முடியாமைக்கான காரணங்களை அவர் ஆணைக்குழுவிற்கு சமர்ப்பித்திருந்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்