கேரளக்கஞ்சாவுடன் வல்வெட்டித்துறை இளைஞர் கைது

கேரளக்கஞ்சாவுடன் வல்வெட்டித்துறை இளைஞர் கைது

கேரளக்கஞ்சாவுடன் வல்வெட்டித்துறை இளைஞர் கைது

எழுத்தாளர் Bella Dalima

24 Mar, 2017 | 3:05 pm

வவுனியா – புளியங்குளம் சந்தியில் கேரளக்கஞ்சாவுடன் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த இளைஞரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரிடமிருந்து சுமார் 20 கிலோகிராம் கேரளக்கஞ்சா கைப்பற்றப்பட்டதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்தது.

வவுனியா – முல்லைத்தீவு பிரதான வீதியில் புளியங்குளம் சந்தியிலுள்ள பஸ்தரிப்பிடத்தில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரிடமிருந்து கைப்பற்றப்பட்ட கஞ்சாவை யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பிற்குக் கடத்த முயற்சி இடம்பெற்றுள்ளதாக வவுனியா மதுவரித் திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.

வவுனியா மதுவரித் திணைக்களத்திற்கு கிடைத்த தகவலையடுத்து 21 வயதான சந்தேகநபர் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரை வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் வவுனியா மதுவரித் திணைக்கள அதிகாரிகள் மேலதிக விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்