கிண்ணியாவில் டெங்கு குடம்பிகள் பரவக்கூடிய வகையில் சூழலை வைத்திருந்த 19 பேருக்கு எதிராக வழக்குத்தாக்கல்

எழுத்தாளர் Bella Dalima

24 Mar, 2017 | 3:21 pm

திருகோணமலை – கிண்ணியா பகுதியில் டெங்கு குடம்பிகள் பரவக்கூடிய வகையில் சூழலை வைத்திருந்த 19 பேருக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

பொலிஸாரால் முன்னெடுக்கப்படும் சோதனை நடவடிக்கையின் போது குறித்த இடங்கள் அடையாளங்காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, கிண்ணியா பகுதியில் முப்படைகளின் ஒத்துழைப்புடன் தொடர்ந்தும் நுளம்பு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கிண்ணியா பிரதேச செயலாளர் மொஹட் அனிபா அனஸ் தெரிவித்தார்.

மேலும், கிண்ணியாவில் பயன்பாட்டிற்கு உதவாத கிணறுகளில் இரசாயனப் பொருட்கள் விசிறியும் ஏனைய கிணறுகளுக்கு வலைகள் பொருத்தியும் வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் திருகோணமலை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்டவர்களில் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.

இவர்களில் 14 பேர் கிண்ணியா சுகாதார பிரிவிற்குள் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்