இலங்கைக்கு இரண்டு வருட கால அவகாசம்: நம்பிக்கைக்கு ஏற்ற வகையில் செயற்படுவதாக உறுதி

இலங்கைக்கு இரண்டு வருட கால அவகாசம்: நம்பிக்கைக்கு ஏற்ற வகையில் செயற்படுவதாக உறுதி

இலங்கைக்கு இரண்டு வருட கால அவகாசம்: நம்பிக்கைக்கு ஏற்ற வகையில் செயற்படுவதாக உறுதி

எழுத்தாளர் Bella Dalima

24 Mar, 2017 | 3:50 pm

இலங்கையில் போருக்குப் பின்னரான நல்லிணக்கம் மற்றும் போர்க்குற்ற விசாரணை தொடர்பான ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் பரிந்துரைகளை நிறைவேற்ற இலங்கை அரசுக்கு மேலும் இரண்டு வருட கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நடைபெற்ற விவாதத்தில் நிபந்தனைகளை நிறைவேற்ற ஏற்கனவே வழங்கப்பட்ட ஒன்றரை வருட காலத்தில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்ற விமர்சனத்தை இலங்கை தமிழர் அமைப்புக்கள் மற்றும் புலம்பெயர்ந்த தமிழர்கள் முன்வைத்தனர்.

இந்த நிலையில், ஜெனீவாவில் நேற்று (23) நடைபெற்ற அமர்வில், இலங்கை சர்வதேச சமூகத்திற்கு அளித்த உத்தரவாதங்களை நிறைவேற்ற இலங்கைக்கு மேலும் இரண்டு வருடங்கள் அவகாசம் வழங்கும் தீர்மானத்தை பிரித்தானியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கூட்டாகக் கொண்டுவந்தன.

இந்த புதிய கால அவகாசம் தொடர்பான தீர்மானத்திற்கு எந்த நாடும் எதிர்ப்பு தெரிவிக்காததால் வாக்கெடுப்பு இன்றி நிறைவேற்றப்பட்டது.

இதேவேளை, ஐ.நா. மனித உரிமைகள் பேரவை மீண்டும் கால அவகாசம் வழங்கியமைக்கு இலங்கை அரசாங்கம் நன்றி தெரிவித்துள்ளது.

சர்வதேச நாடுகள் தம்மீது கொண்டுள்ள நம்பிக்கைக்கு ஏற்ற வகையில் செயற்படுவதாகவும் இலங்கை உறுதி அளித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்