மின்னணு சாதனங்களுடன் விமானத்தில் பயணிக்க 6 நாட்டுப் பயணிகளுக்குத் தடை விதித்தது இங்கிலாந்து

மின்னணு சாதனங்களுடன் விமானத்தில் பயணிக்க 6 நாட்டுப் பயணிகளுக்குத் தடை விதித்தது இங்கிலாந்து

மின்னணு சாதனங்களுடன் விமானத்தில் பயணிக்க 6 நாட்டுப் பயணிகளுக்குத் தடை விதித்தது இங்கிலாந்து

எழுத்தாளர் Bella Dalima

22 Mar, 2017 | 3:30 pm

மடிக்கணினி, ஐபோன் உள்ளிட்ட மின்னணு சாதனங்களை விமானப் பயணங்களின் போது கொண்டு வர 8 நாடுகளின் பயணிகளுக்கு அமெரிக்கா விதித்த தடையைத் தொடர்ந்து இங்கிலாந்தும் 6 நாட்டுப் பயணிகளுக்கு இத்தகைய தடையை விதித்துள்ளது.

துருக்கி, லெபனான், ஜோர்டான், எகிப்து, துனிசியா மற்றும் சவுதி அரேபியா ஆகிய 6 நாடுகளே இங்கிலாந்தின் தடைப்பட்டியலில் உள்ளன.

குறித்த நாடுகளில் இருந்து இங்கிலாந்து நோக்கிப் பயணிப்போர், மடிக்கணினி, DVD பிளேயர், ஐபேட், கேமராக்கள் மற்றும் வீடியோ கேம் சாதனங்களை கைச்சுமையாக விமானங்களில் கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதே பொருட்களை பரிசோதனைக்கு உட்படுத்தி, சூட்கேஸ் உள்ளிட்ட மூடப்பட்ட உடைமைகளில் வைத்து எடுத்துச்செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு மத்திய கிழக்கு நாடுகளின் பயணிகள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

விமானப் பயணத்தின் போது மருத்துவம் சார்ந்த பொருட்கள் மற்றும் உபகரணங்களை எடுத்துச்செல்ல, தடை ஏதுமில்லை.

உள்நாட்டு பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு இந்த தடை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இங்கிலாந்து அரசு கூறியுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்