மக்கள் சக்தி மெடிக்கல் திட்டத்தினால் கிண்ணியாவில் சிரமதானப் பணிகள் முன்னெடுப்பு

மக்கள் சக்தி மெடிக்கல் திட்டத்தினால் கிண்ணியாவில் சிரமதானப் பணிகள் முன்னெடுப்பு

மக்கள் சக்தி மெடிக்கல் திட்டத்தினால் கிண்ணியாவில் சிரமதானப் பணிகள் முன்னெடுப்பு

எழுத்தாளர் Bella Dalima

22 Mar, 2017 | 8:28 pm

மக்கள் சக்தி மெடிக்கல் திட்டத்தினால் கிண்ணியா பகுதியில் இன்று சிரமதானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களையும் நியூஸ்பெஸ்ட் குழுவினர் வழங்கினர்.

கிண்ணியாவின் பல பகுதிகளிலும் இன்று அதிகாலை 2.30 மணி வரை நிவாரணப் பொருட்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன.

கிண்ணியாவில் டெங்கு தாக்கத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் பால் மா, நுளம்பு வலை போன்ற பொருட்கள் மக்கள் சக்தி மெடிக்கல் பிரிவால் வழங்கி வைக்கப்பட்டன.

முப்படையினர் உட்பட பல தரப்பினரும் மக்கள் சக்தி மெடிக்கல் திட்டத்திற்கு தமது ஒத்துழைப்பை வழங்கினர்.

தாமரவில்லு பகுதியில் அமைந்துள்ள தேசிய இளைஞர் படையணி பயிற்சி முகாமிலும் தேசிய இளைஞர் படையணியின் இளைஞர் யுவதிகளுடன் இணைந்து சிரமதானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

பாடசாலை மாணவ மாணவியருக்கு டெங்கு காய்ச்சல் தொடர்பில் நியூஸ்பெஸ்ட் குழாத்தினரால் விழிப்புணர்வு வழங்கப்பட்டது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்