தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு மோடிக்கு தமிழக முதல்வர் கடிதம்

தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு மோடிக்கு தமிழக முதல்வர் கடிதம்

தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு மோடிக்கு தமிழக முதல்வர் கடிதம்

எழுத்தாளர் Staff Writer

22 Mar, 2017 | 12:50 pm

தமிழக மீனவர்கள் 10 பேரையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் நரேந்திர மோடியிடம் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக பிரதமருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.

இந்த தொடர் கைது நடவடிக்கைகள் தமிழக மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காண எடுக்கப்படும் இராஜாங்க ரீதியிலான முயற்சிகளை தடுப்பதாக அமைந்துள்ளது என அவர் கூறியுள்ளார்.

நீண்ட காலமாக நிலவி வரும் தமிழக மீனவர் பிரச்சினைக்கு விரைந்து தீர்வு காணவேண்டியது தற்போதைய அவசர தேவை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தமிழக மீனவர்கள் 10 பேரையும் , அவர்களுக்குச் சொந்தமான மீன்பிடி படகையும், ஏற்கெனவே இலங்கை வசம் உள்ள 129 மீன்பிடி படகுகளையும் உடனடியாக விடுவிப்பதற்கு இராஜாங்க ரீதியில் உறுதியான நடவடிக்கை எடுக்க இந்திய வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகளுக்கு உடனடி உத்தரவு பிறப்பிக்குமாறும் கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்