ஜனாதிபதி மொஸ்கோ சென்றடைந்தார்; நாளை விளாடிமிர் புட்டினை சந்திக்கிறார்

ஜனாதிபதி மொஸ்கோ சென்றடைந்தார்; நாளை விளாடிமிர் புட்டினை சந்திக்கிறார்

எழுத்தாளர் Bella Dalima

22 Mar, 2017 | 7:21 pm

மூன்று நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று ரஷ்யாவின் மொஸ்கோ நகரைச் சென்றடைந்தார்.

ஜனாதிபதி உள்ளிட்ட தூதுக் குழுவினரை ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் எக்கோ மோகுலோ உள்ளிட்ட உயர்மட்டக் குழுவினர் மொஸ்கோ சர்வதேச விமான நிலையத்தில் வரவேற்றனர்.

வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர அமைச்சர்களான எஸ்.பி. நாவின்ன, மஹிந்த சமரசிங்க, சுசில் பிரேமஜயந்த மற்றும் தயாசிறி ஜயசேகர ஆகியோரும் ஜனாதிபதியுடன் ரஷ்யா சென்றுள்ளனர்.

ஜனாதிபதி நாளை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை சந்திக்கவுள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்