சோமாலியாவில் 26 பேர் பட்டினியால் உயிரிழப்பு

சோமாலியாவில் 26 பேர் பட்டினியால் உயிரிழப்பு

சோமாலியாவில் 26 பேர் பட்டினியால் உயிரிழப்பு

எழுத்தாளர் Bella Dalima

22 Mar, 2017 | 4:20 pm

வட கிழக்கு ஆப்பிரிக்க நாடான சோமாலியாவின் பொருளாதாரம் சீர்குலைந்துள்ள நிலையில், அங்கு பட்டினிச்சாவை எதிர்நோக்கியுள்ள மக்களின் அவலம் தொடர்கின்றது.

சோமாலியாவின் ஜூப்லேண்ட் பகுதியில் ஒன்றரை நாளில் 26 பேர் பட்டினியால் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

அந்நாட்டின் அரசாங்க வானொலி தனது இணையத்தளத்தில் இத்தகவலை வெளியிட்டுள்ளது.

சோமாலியாவில் சுமார் 62 இலட்சம் பேர் பட்டினியால் பரிதவிப்பதாகவும் அவர்களுக்கு உடனடியாக உணவுப்பொருட்கள் தேவைப்படுவதாகவும் தெரியவந்துள்ளது.

கடுமையான வறட்சியாலும் விளைநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாலும் கால்நடைகள் மடிவதாலும் மக்கள் பெரும் பாதிப்புகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்