சம்பூரில் பெண்ணொருவர் சந்தேகமான முறையில் உயிரிழப்பு: விசாரணை ஆரம்பம்

சம்பூரில் பெண்ணொருவர் சந்தேகமான முறையில் உயிரிழப்பு: விசாரணை ஆரம்பம்

சம்பூரில் பெண்ணொருவர் சந்தேகமான முறையில் உயிரிழப்பு: விசாரணை ஆரம்பம்

எழுத்தாளர் Staff Writer

22 Mar, 2017 | 11:19 am

சம்பூர் சின்னக்குளம் பகுதியில் வீடொன்றினுள் பெண் ஒருவர் சந்தேகத்திற்கிடமாக உயிரிழந்தமை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

37 வயதான பெண் ஒருவரே சந்தேகத்திற்கிடமாக உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த பெண் நேற்று முன்தினம் (19) மற்றுமொரு பெண்ணுடன் கிண்ணியா பகுதிக்குச் சென்று கருகலைப்பு செய்திருந்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மருத்துவர் என கூறப்படுகின்ற ஒருவரால் இந்த கருகலைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்