கேப்பாப்பிலவில் 22 ஆவது நாளாக போராட்டம்; காணி உரிமம் வேண்டுமென பன்னங்கண்டி மக்கள் கோரிக்கை

கேப்பாப்பிலவில் 22 ஆவது நாளாக போராட்டம்; காணி உரிமம் வேண்டுமென பன்னங்கண்டி மக்கள் கோரிக்கை

கேப்பாப்பிலவில் 22 ஆவது நாளாக போராட்டம்; காணி உரிமம் வேண்டுமென பன்னங்கண்டி மக்கள் கோரிக்கை

எழுத்தாளர் Bella Dalima

22 Mar, 2017 | 8:32 pm

இராணுவ வசமுள்ள சுமார் 530 ஏக்கர் காணியை விடுவிக்கக் கோரி 22 ஆவது நாளாக கேப்பாப்பிலவு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு பல நாட்கள் கடந்தும், தமது பிரச்சினைக்கு தீர்வை முன்வைக்க எவரும் முன்வரவில்லை என கேப்பாப்பிலவு மக்கள் குற்றஞ்சாட்டினர்.

தமது பூர்வீகக் காணியை விடுவிக்கக் கோரி, சீனியாமோட்டை, சூரிபுரம், கேப்பாப்பிலவு ஆகிய மூன்று கிராமங்களைச் சேர்ந்த 128 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் கடந்த முதலாம் திகதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கிளிநொச்சி – பன்னங்கண்டி மக்கள் காணி உரிமம் கோரி மீண்டும் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

சிவா பசுபதி கமம், சரஸ்வதி கமம் மற்றும் ஜொனி குடியிருப்பு ஆகிய கிராமங்களை உள்ளடக்கிய பன்னங்கண்டி கிராமத்தில், 1990 ஆம் ஆண்டு குடியேற்றப்பட்டவர்களுக்கு காணி உரிமம் கோரி சிவா பசுபதி கமம் மக்கள் கடந்த 4 ஆம் திகதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

15 நாள் போராட்டத்தின் பின்னர், காணி உரிமையாளரின் சம்மதத்தை அடுத்து, காணி உரித்து மற்றும் வீட்டுத் திட்டங்களை வழங்குவதாக அரசாங்க அதிபர் வாக்குறுதியளித்ததால் கடந்த சனிக்கிழமை போராட்டம் கைவிடப்பட்டது.

சிவா பசுபதி கமம் மக்களுக்கு தீர்வு வழங்கியதைப் போன்று தமக்கும் காணி உரிமம் வழங்கப்பட வேண்டும் என கோரி சரஸ்வதி கமம் மற்றும் ஜொனி குடியிருப்பு மக்கள் இன்று முதல் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்