கலாநிதி சுரேன் பட்டகொடவை உடனடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு உத்தரவு

கலாநிதி சுரேன் பட்டகொடவை உடனடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு உத்தரவு

கலாநிதி சுரேன் பட்டகொடவை உடனடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு உத்தரவு

எழுத்தாளர் Staff Writer

22 Mar, 2017 | 1:43 pm

மின்சக்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி சுரேன் பட்டகொடவை உடனடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு பிரதம நீதவான் லால் ரணசிங்க இன்று (22) உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தாக்கல் செய்த வழக்கில் ஆஜராகத் தவறியதால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அபிவிருத்தி லொத்தர் சபையின் முன்னாள் தலைவர் சரண குணவர்தன இரண்டு வருடங்களுக்கான சொத்து விபரங்களை சமர்ப்பிக்கத் தவறியுள்ளதாக தெரிவித்து இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளது.

இந்த காலப் பகுதியில் சுரேன் பட்டகொட நிதி அமைச்சின் சொத்து விபரங்கள் தொடர்பிலான பிரிவில் கடமையாற்றியிருந்ததால் அவர் இந்த வழக்கின் முதல் சாட்சியாளராக பெயரிடப்பட்டுள்ளார்.

இதற்கான அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையிலும் சுரேன் பட்டகொட இன்று (22) நீதிமன்றத்தில்ஆஜராகியிருக்கவில்லை.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்