இலங்கை கடுமையாகத் தண்டிக்கப்படுவதை மத்திய அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும்: தி.மு.க வலியுறுத்தல்

இலங்கை கடுமையாகத் தண்டிக்கப்படுவதை மத்திய அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும்: தி.மு.க வலியுறுத்தல்

எழுத்தாளர் Bella Dalima

22 Mar, 2017 | 6:34 pm

அமெரிக்காவும் பிரித்தானியாவும் இலங்கைக்கு ஆதரவாக ஐ.நா மனித உரிமை பேரவையில் கொண்டுவரும் பிரேரணையை இந்தியா எதிர்க்க வேண்டும் என தமிழக அரசியல் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இலங்கை அரசாங்கம் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவை விசாரணையில் கடுமையாகத் தண்டிக்கப்படுவதை மத்திய அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் என திராவிட முன்னேற்றக் கழகம் வலியுறுத்தியுள்ளது.

இலங்கை தமிழர்களுக்கு எதிராக நடைபெற்ற மனித உரிமை மீறல்கள், சர்வதேச சட்டமீறல்கள், போர்க்குற்றங்கள், இனப்படுகொலை ஆகியவை குறித்து சுதந்திரமானதும் நம்பகத்தன்மை வாய்ந்ததுமான சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

இதேவேளை, இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைப்படி அண்டை நாடான இலங்கையுடன் நட்பாக இருக்க விரும்புவதாக பிரதமர் நரேந்திர மோடிக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞர் அணி தலைவர் அன்புமணி இராமதாஸ் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையில் மனித உரிமை மீறல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை அரசுடனான இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை மத்திய அரசு மீள் பரிசீலனை செய்ய வேண்டும் எனவும் அன்புமணி இராமதாஸ், பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்