ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு முதலீட்டாளர் ஒருவரை அழைத்து வருவது குறித்து ஆராய குழு நியமனம்

ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு முதலீட்டாளர் ஒருவரை அழைத்து வருவது குறித்து ஆராய குழு நியமனம்

ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு முதலீட்டாளர் ஒருவரை அழைத்து வருவது குறித்து ஆராய குழு நியமனம்

எழுத்தாளர் Staff Writer

21 Mar, 2017 | 1:19 pm

ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கென முதலீட்டாளர் ஒருவரை அழைத்து வருவது குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக அமைச்சரவை உபகுழுவொன்றை ஜனாதிபதி நியமித்துள்ளார்.

இன்று (21) நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போதே ஜனாதிபதி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக ஜனாதிபதி ஆழமாக சிந்தித்து, அதுகுறித்து தீர்மானத்திற்கு வருவதற்காக அமைச்சரவை உபகுழுவை நியமித்துள்ளதாக துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை பதில் அமைச்சர் நிஷாந்த முத்துஹெட்டிகம தெரிவித்துள்ளார்.

அமைச்சர்களான சரத் அமுனுகம, சம்பிக்க ரணவக்க, சுசில் பிரேமஜயந்த, அர்ஜுண ரணதுங்க மற்றும் பைசர் முஸ்தபா ஆகியோரை இந்த அமைச்சரவை உபகுழுவிற்கு ஜனாதிபதி நியமித்துள்ளதாக பதில் அமைச்சர் குறிப்பிட்டார்.

ஹம்பாந்தோட்டை மாகம்புர துறைமுகத்திற்கு முதலீட்டாளர் ஒருவரை உள்ளீர்ப்பதற்கான நோக்கத்திலேயே ஜனாதிபதி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக அமைச்சர் நிஷாந்த முத்துஹெட்டிகம மேலும் கூறினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்