துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான காணி மறுசீரமைப்பு ஆணைக்குழு பணிப்பாளருக்கு விசேட பாதுகாப்பு

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான காணி மறுசீரமைப்பு ஆணைக்குழு பணிப்பாளருக்கு விசேட பாதுகாப்பு

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான காணி மறுசீரமைப்பு ஆணைக்குழு பணிப்பாளருக்கு விசேட பாதுகாப்பு

எழுத்தாளர் Staff Writer

19 Mar, 2017 | 2:47 pm

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர், நேசகுமார் விமல்ராஜிற்கு பாதுகாப்பு அமைச்சினூடாக விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஆணைக்குழுவின் கோரிக்கைக்கு அமைய, தனக்கும், தனது வீட்டுக்கும் தற்போது விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக நேசக்குமார் விமல்ராஜ் நியூஸ்பெஸ்ட்டுக்கு குறிப்பிட்டார்.

இதேவேளை காணி மறுசீரமைப்பு திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் நேசக்குமார் விமல்ராஜ் மீதான துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பில் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக சம்பந்தப்பட்ட தரப்புகளுக்கு ஏற்கனவே முறைப்பாடு செய்துள்ளதாக காணி மறுசீரமைப்பு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் முறையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸ் மாஅதிபர் மற்றும் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் ஆகியோரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் தலைவர் சுமனதிஸ்ஸ தாமுகல குறிப்பிட்டார்.

இதுதொடர்பாக பொலிஸார் முன்னெடுத்து வரும் விசாரணைகள் குறித்து தொடர்ந்தும் கண்காணித்து வருவதாகவும் அவர் கூறினார்.

இதுதவிர துப்பாக்கிப் பிரயோகத்திற்கு இலக்கான நேசக்குமார் விமல்ராஜ் பூரண குணமடையும் வரை அவருக்கு சேவை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாகவும் காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் தலைவர் மேலும் தெரிவித்தார்.

காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் மட்டக்களப்பு மாவட்டப் பணிப்பாளர் நேசகுமார் விமல்ராஜ் மீது கடந்த மாதம் 22 ஆம் திகதி இரவு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றனர்.

இந்த சம்பவம் இடம்பெற்று இன்றுடன் 25 நாட்களாகியும், இதனுடன் தொடர்புடைய எவரும் இதுவரை கைதுசெய்யப்படவில்லை.

பல்வேறு கோணங்களில் பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பில் தமிழ் அரசியல் தலைமைகள் எதுவித ஆக்கபூர்வ நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என மக்கள் குற்றம்சுமத்தியுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்