உயர்  பொலிஸ் அதிகாரிகள் இருவர்  இடமாற்றம்

உயர் பொலிஸ் அதிகாரிகள் இருவர்  இடமாற்றம்

உயர் பொலிஸ் அதிகாரிகள் இருவர்  இடமாற்றம்

எழுத்தாளர் Staff Writer

19 Mar, 2017 | 12:07 pm

பொலிஸ் மாஅதிபரின் பணிப்பின் கீழ் உயர் பொலிஸ் அதிகாரிகள் இருவருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

உடன் அமுலுக்கு வரும் வகையில் இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய மன்னார் பிராந்தியத்தின் பொலிஸ் அத்தியட்சகராக பணியாற்றிய எச்.என.எஸ்.பீரீஸ் கண்டிக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இதேவேளை, பிரதமர் பாதுகாப்பு பிரிவில் கடமையாற்றிய தலைமை பொலிஸ் இன்ஸ்பெக்டர் கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்