அரச நிர்வாக சேவைக்கு புதிதாக 250 பேரை இணைத்துக்கொள்ள நடவடிக்கை

அரச நிர்வாக சேவைக்கு புதிதாக 250 பேரை இணைத்துக்கொள்ள நடவடிக்கை

அரச நிர்வாக சேவைக்கு புதிதாக 250 பேரை இணைத்துக்கொள்ள நடவடிக்கை

எழுத்தாளர் Staff Writer

19 Mar, 2017 | 11:07 am

நாடளாவிய ரீதியில் அரச நிர்வாக சேவைக்கான 252 வெற்றிடங்கள் காணப்படுவதாக பொது நிருவாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

அவற்றில் பிரதேச செயலாளருக்கான பதவி வெற்றிடங்கள் பல காணப்படுவதாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே ரத்னசிறி் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு தீர்வு காணும் முகமாக அரச நிர்வாக சேவைக்கு 250 ஊழியர்களை புதிதாக இணைத்துக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அரச நிர்வாக சேவைக்கு ஏற்கனவே தெரிவாகியுள்ள 134 பேருக்கான பயிற்சிகள் தற்போது வழக்கப்படுவதாகவும் ஜே.ஜே ரத்னசிறி தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் சில மாதங்களில் இவர்கள் சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாகவும் பொது நிருவாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் ஜே.ஜே ரத்னசிறி குறிப்பிட்டுள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்