அதிரடி கதையம்சத்துடன் திகில் படமாக தயாராகி வரும் விவேகம்

அதிரடி கதையம்சத்துடன் திகில் படமாக தயாராகி வரும் விவேகம்

அதிரடி கதையம்சத்துடன் திகில் படமாக தயாராகி வரும் விவேகம்

எழுத்தாளர் Staff Writer

19 Mar, 2017 | 6:13 pm

‘விவேகம்’ படத்தில் அஜித்குமார் ஹொலிவுட்டின் அதிரடி கதாநாயகர்கள் போல் நடித்து வருகிறார், அவரது புதிய தோற்றம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

அஜித்குமார் நடித்து வரும் ‘விவேகம்’ அவரது 57 ஆவது படமாக வெளிவரவுள்ளது அதிரடி கதையம்சத்துடன் திகில் படமாக தயாராகிறது.

இந்த படத்தை சிவா இயக்கி வருகிறார், இவர் ஏற்கனவே அஜித்தை வைத்து வீரம், வேதாளம் என்ற இரண்டு படங்களை இயக்கி வெளியிட்டார்.

இதேவேளை தாதா, பொலிஸ் அதிகாரி ஆகிய கதாபாத்திரங்களில் அஜித் மாறி மாறி நடித்து வருகிறார், இது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருக்கிறது.

மங்காத்தா படத்தில் பொலிஸ் அதிகாரியாகவும் வீரம், வேதாளம் படங்களில் தாதா வேடம் ஏற்றார். தற்போது விவேகம் படத்தில் மீண்டும் அதிரடி பொலிஸ் அதிகாரி கதாபாத்திரத்திற்கு மாறியுள்ளார்.

இந்த படத்தில் உளவுத்துறை அதிகாரியாக அஜித் நடிக்கின்றார்.

இதன் படப்பிடிப்பு கடந்த ஏப்ரல் மாதம் பல்கேரியாவில் தொடங்கியது, ஹெலிகொப்டர்கள், வெளிநாட்டு நடிகர்களை வைத்து 60 சதவீத படப்பிடிப்பை அங்கு முடித்து விட்டு சென்னை திரும்பினார்கள்.

தற்போது கடைசி கட்ட படப்பிடிப்புக்காக படக்குழுவினர் மீண்டும் பல்கேரியா புறப்பட்டுச் சென்றுள்ளனர், ஆகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி படத்தை திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர்.

இந்த நிலையில் விவேகம் படத்தில் அஜித்குமாரின் அதிரடி தோற்றம் வெளியாகி இருக்கிறது, வெடிகுண்டு தாக்குதலில் இருந்து அவர் மீண்டு வந்து ரத்தக்களறியுடன் நிற்பதுபோல் இந்த தோற்றம் இருக்கிறது.

_c2de8600-0ae4-11e7-814d-775bded0c5ff

விவேகம் படத்தில் கதாநாயகியாக காஜல் அகர்வால் நடிக்கிறார், கமல்ஹாசன் மகள் அக்‌ஷராஹாசனும் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார். பிரபல இந்தி நடிகர் விவேக் ஓபராய் வில்லன் வேடம் ஏற்றுள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்