கட்டுகஸ்தோட்டையில் மகாவலி கங்கையில் மூழ்கி மாணவர் காணாமற்போயுள்ளார்

கட்டுகஸ்தோட்டையில் மகாவலி கங்கையில் மூழ்கி மாணவர் காணாமற்போயுள்ளார்

கட்டுகஸ்தோட்டையில் மகாவலி கங்கையில் மூழ்கி மாணவர் காணாமற்போயுள்ளார்

எழுத்தாளர் Bella Dalima

18 Mar, 2017 | 4:37 pm

கண்டி – கட்டுகஸ்தோட்டை பகுதியில் மகாவலி கங்கையில் மூழ்கி மாணவர் ஒருவர் காணாமற்போயுள்ளார்.

கண்டியிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றில் தரம் 11 இல் கல்வி பயிலும் 16 வயதான மாணவரே நீரில் மூழ்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நண்பர்கள் சிலருடன் மகாவலி கங்கையில் குளிக்கச் சென்றபோது குறித்த மாணவர் நீரில் மூழ்கி நேற்று (17) மாலை காணாமற்போயுள்ளார்.

மாணவரைத் தேடும் பணிகள் கடற்படையினரின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்