இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு அமெரிக்க இராஜாங்க திணைக்களம் பாராட்டு

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு அமெரிக்க இராஜாங்க திணைக்களம் பாராட்டு

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு அமெரிக்க இராஜாங்க திணைக்களம் பாராட்டு

எழுத்தாளர் Bella Dalima

17 Mar, 2017 | 3:05 pm

இலங்கையில் முன்னெடுக்கப்படும் நல்லிணக்க செயற்பாடுகளை அமெரிக்க இராஜாங்க திணைக்களம் பாராட்டியுள்ளது.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பாக சமர்ப்பிக்கப்படவிருக்கும் பிரேரணைக்கு இலங்கையுடன் இணைந்து இணை அனுசரணை வழங்கவும் அமெரிக்கா இணக்கம் தெரிவித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் சகல இனத்தவர்களிடையிலும் சமாதானத்தை ஏற்படுத்தவும் சட்டத்தை நடைமுறைப்படுத்தவும் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் குறித்தும் அமெரிக்க இராஜாங்க திணைக்களம் கவனம் செலுத்தியுள்ளது.

இலங்கை தொடர்பான பிரேரணையை தயாரிப்பதற்கு ஐக்கிய இராச்சியம், மொன்டேநீக்ரோ, மற்றும் மசீடோனியா என்பவற்றுடன் நெருக்கமாக கலந்தாலோசித்து, இலங்கை அரசாங்கத்துடன் பங்காளித்துவத்துடன் ஐக்கிய அமெரிக்கா செயற்பட்டதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் பதில் ஊடகப் பேச்சாளர் மார்க் சி. ரோனர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணை அனுசரணையாளர்கள் பட்டியலில் தமது பெயரையும் சேர்த்துக்கொண்டு இலங்கையில் நல்லிணக்கத்திற்கும், சமாதானத்திற்கும் ஆதரவினை வெளிப்படுத்துமாறு ஐ.நா. உறுப்பு நாடுகளுக்கு அழைப்பு விடுப்பதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்