அரசியல்வாதிகள் தமது கோரிக்கையை நிறைவேற்றவில்லை என காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் கவலை

அரசியல்வாதிகள் தமது கோரிக்கையை நிறைவேற்றவில்லை என காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் கவலை

எழுத்தாளர் Staff Writer

12 Mar, 2017 | 7:40 pm

வாக்களித்து பாராளுமன்றத்திற்கு தெரிவுசெய்தவர்கள் தமது பிரச்சினைக்கு தீர்வினை வழங்க தவறியுள்ளதாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கவலை வெளியிடுகின்றனர்.

இதனாலேயே தொடர் போராட்டங்களை நடத்த வேண்டிய நிலைக்கு தாம் தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஆரம்பித்த கவனயீர்ப்புப் போராட்டம் 21 ஆவது நாளாகவும் தொடர்கின்றது.

இன்று போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை வட மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் சென்று சந்தித்தார்.

இதேவேளை வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் 17 ஆவது நாளாகவும் சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர்கின்றனர்.

இன்றைய தினம் அவர்கள் கறுப்பக்கொடிகளை ஏந்தியிருந்தனர்.

முல்லைத்தீவு மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் போராட்டம் ஐந்தவது நாளாவும் தெடர்கின்றது.

திருகோணமலை மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் நடத்தும் சுழற்சி முறை உண்ணாவிரதப் போராட்டம் ஒரு வாரத்தை கடந்துள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்