காதலுக்கு தூது போன புறாக்கள் காற்று மாசைக் கண்டறியும்: விஞ்ஞானிகளின் புதிய திட்டம்

காதலுக்கு தூது போன புறாக்கள் காற்று மாசைக் கண்டறியும்: விஞ்ஞானிகளின் புதிய திட்டம்

காதலுக்கு தூது போன புறாக்கள் காற்று மாசைக் கண்டறியும்: விஞ்ஞானிகளின் புதிய திட்டம்

எழுத்தாளர் Bella Dalima

10 Mar, 2017 | 3:51 pm

ஒரு காலத்தில் காதலுக்காக தூதுபோன புறாக்களை காற்று மாசடைவதைத் தடுப்பதற்குப் பயன்படுத்த விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர்.

நெரிசல் மிகுந்த நகரக் கட்டிடங்களுக்கு மேற்பகுதியில் காற்றின் தரத்தை அறிய புறாக்களை விஞ்ஞானிகள் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர்.

பர்மிங்காம் பல்கலைக்கழக அறிவியலாளர்கள் புறாக்களை வைத்து காற்று மாசடைதலைக் கண்டறிய முடியும் என குறிப்பிட்டுள்ளனர்.

ரிக் தொமஸ் என்பவர் நுண்ணிய கருவியொன்றை புறாக்களின் பின் பகுதியில் இணைக்கத் திட்டமிட்டுள்ளார்.

கூரையின் மேல் இருக்கின்ற வெப்பநிலை தெரிந்தால், நகர்ப்புற காற்றின் மாசு மாதிரியைக் கண்டறியலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

புறாவின் நலனை முன்னிட்டு கருவியின் எடையை மிகக்குறைவாக வடிவமைத்துள்ளனர்.

அதாவது, புறாவின் எடையில் 5 வீதம் மாத்திரமே கருவியின் எடை இருக்கும்.

பறப்பதைப் பதிவு செய்வதற்காக இன்னொரு புறாவில் நுண்ணிய கெமராவை இணைத்துக் கண்காணிக்க திட்டமிடப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்