கேப்பாப்பிலவு மக்களின் போராட்டம் ஒன்பதாவது நாளாகத் தொடர்கிறது

கேப்பாப்பிலவு மக்களின் போராட்டம் ஒன்பதாவது நாளாகத் தொடர்கிறது

எழுத்தாளர் Bella Dalima

09 Mar, 2017 | 9:51 pm

முல்லைத்தீவு – கேப்பாப்பிலவிலுள்ள பூர்வீகக் காணிகளை மீட்கும் மக்களின் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் 9 நாட்கள் கடந்துள்ளன.

முல்லைத்தீவு இராணுவத் தலைமையகம் அமைந்துள்ள சுமார் 530 ஏக்கர் காணியை விடுவிக்கக்கோரி, கடந்த முதலாம் திகதி மக்கள் இந்தப் போராட்டத்தை ஆரம்பித்தனர்.

சீனியாமோட்டை, சூரிபுரம், கேப்பாப்பிலவு ஆகிய மூன்று கிராமங்களைச் சேர்ந்த 128 குடும்பங்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கேப்பாப்பிலவு, பிலக்குடியிருப்பு மக்களின் காணிகள் விடுவிக்கப்பட்டதைப் போன்று தமது காணிகளும் விடுவிக்கப்படும் என்ற நம்பிக்கையுடன் இந்த மக்களின் போராட்டம் தொடர்கின்றது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்