புனர்வாழ்வளிக்கப்பட்ட  முன்னாள் போராளிகளை பொலிஸ் சமூகநலப் பிரிவுடன் இணைத்துக் கொள்ள நடவடிக்கை

புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளை பொலிஸ் சமூகநலப் பிரிவுடன் இணைத்துக் கொள்ள நடவடிக்கை

புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளை பொலிஸ் சமூகநலப் பிரிவுடன் இணைத்துக் கொள்ள நடவடிக்கை

எழுத்தாளர் Staff Writer

07 Mar, 2017 | 9:01 am

சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்களாக கடமையாற்றும் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் 200 பேரை, வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் பொலிஸ் சமூகநலப் பிரிவுடன் இணைத்துக் கொள்வதற்கு சிவில் பாதுகாப்புத் திணைக்களம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இந்த பிரதேசங்களில் மொழிக் கையாள்கையில் நிலவும் பிரச்சினைகளைத் தவிர்க்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக சிவில் பாதுகாப்புத் திணைக்கள ஆணையாளர் நாயகம் சந்திரரத்ன பல்லேகம குறிப்பிட்டார்.

வடக்கு, கிழக்குப் பிரதேசங்களில் புனர்வாழ்வு பெற்ற சுமார் 3,500 இற்கும் அதிகமான முன்னாள் போராளிகள் சிவில் பாதுகாப்பு சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

பொலிஸ் துறை, சட்டம் மற்றும் ஒழுங்கு உள்ளிட்ட சம்பந்தப்பட்ட விடயங்களை அவர்களுக்கு தெளிவுபடுத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாக சிவில் பாதுகாப்புத் திணைக்கள ஆணையாளர் நாயகம் கூறினார்.

இதுதவிர கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் மொழிக் கையாள்கையில் நிலவும் பிரச்சினைகளுக்கும் இதன் ஊடாக தீர்வினை எட்டமுடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

பொலிஸ் சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ள புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளான சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் தொடர்பில் பொலிஸாருடன் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றிலும் கைச்சாத்திடவுள்ளதாக சந்திரரத்ன பல்லேகம குறிப்பிட்டார்.

பொலிஸ் சேவையில் ஏற்கனவே சுமார் 1950 புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளான சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

எதிர்காலத்திலும் தேவையின் அடிப்படையில் முன்னாள் போராளிகளான சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்களை வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் பொலிஸ் சேவையில் இணைப்பதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அவர் மேலும் கூறினார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்