வடக்கு கிழக்கில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தொடர் போராட்டங்கள்

வடக்கு கிழக்கில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தொடர் போராட்டங்கள்

எழுத்தாளர் Staff Writer

05 Mar, 2017 | 8:45 pm

முல்லைத்தீவு – கேப்பாப்பிலவு மக்களின் நிலவிடுவிப்புப் போராட்டம் தீர்வின்றி தொடர்கின்றது.

கேப்பாபிலவில் அமைந்துள்ள முல்லைத்தீவு இராணுவ தலைமையகத்தை அகற்றி தமது பூர்விக நிலத்தினை விடுவிக்கக்கோரி ஐந்தவது நாளாகவும் மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

சினியாமோட்டை, சூரிபுரம், கேப்பாப்பிலவு ஆகிய மூன்று கிராமங்களைச் சேர்ந்த மக்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

இதேவேளை காணமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களினால் இன்றும் வடக்கு மற்றும் கிழக்கில் எதிர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் கிளிநொச்சி, வவுனியாவில் தொடர் உண்ணாவிரதப் போராட்டமும், திருகோணமலையில் கவனயீர்ப்பு பேராட்டமும் முன்னெடுக்கப்படுகிறது.

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் கிளிநொச்சியில் முன்னெடுக்கப்படும் கவனயீர்ப்புப் போராட்டம் இன்று 14 வது நாளாகவும் தொடர்கின்றது

மேலும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களினால் வவுனியாவில் 10 ஆவது நாளாகவும் உண்ணாவிரதப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்