முகத்தை முழுமையாக மறைக்கும் தலைக்கவசம் அணிவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிர்ப்பு

முகத்தை முழுமையாக மறைக்கும் தலைக்கவசம் அணிவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிர்ப்பு

முகத்தை முழுமையாக மறைக்கும் தலைக்கவசம் அணிவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிர்ப்பு

எழுத்தாளர் Staff Writer

05 Mar, 2017 | 8:05 pm

முகத்தை முழுமையாக மறைக்கும் தலைக்கவசம் அணிவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலுக்கு கொழும்பில் இன்று எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது.

அகில இலங்கை மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்கள் சங்கத்தினர், காலி முகத்திடலிலிருந்து தமது எதிர்ப்பை ஆரம்பித்தனர்.

மோட்டார் சைக்கிள் செலுத்தும் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் உள்ளிட்ட புதிய வர்த்தமானி கடந்த 23ஆம் திகதி, போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால் வெளியிடப்பட்டது.

இதன்படி, மோட்டார் சைக்கிளில் பயணிப்பவர்கள் தலைக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டது.

தலைக்கவசம் அணியும்போது பட்டியொன்றின் ஊடாக அதனை இருக்கி அணிய வேண்டும் என்பதுடன் முகம் தெளிவாக தெரியும் வகையில் அதனை அணிய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தலைக்கவசத்தின் எந்தவொரு பகுதியும், முகத்தின் எந்தவொரு பகுதியையும் மறைக்கும் வகையிலோ, சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையிலோ அல்லது தெளிவற்ற தன்மையைக் கொண்டதாகவோ அமைந்திருக்கக்கூடாது எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தலைக்கவசத்தின் 90 வீதமான பகுதி ஒரே நிறத்தில் காணப்பட வேண்டும் எனவும் அந்த வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்போது, மகஜரில் கையெழுத்திட்ட எதிர்ப்பாளர்கள் பின்னர், பேரணியாக ஜனாதிபதி செயலகம் நோக்கிச் சென்றனர்.

எதிர்ப்பில் ஈடுபட்டவர்களில் சிலருக்கு மாத்திரம் ஜனாதிபதி செயலகத்திற்குள் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

எதிர்வரும் புதன்கிழமை இது தொடர்பில் கலந்துரையாடுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக, ஜனாதிபதியின் உதவிச் செயலாளர் சதுர லியனகுணவர்தன இதன்போது தெரிவித்தார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்