புத்தளம் ஊடான ரயில் சேவை இன்றும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது

புத்தளம் ஊடான ரயில் சேவை இன்றும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது

புத்தளம் ஊடான ரயில் சேவை இன்றும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது

எழுத்தாளர் Staff Writer

05 Mar, 2017 | 4:29 pm

புத்தளம் வீதியூடான ரயில் சேவை இன்றும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இன்று இரவு 8 மணிவரை கட்டுநாயக்க, நீர்கொழும்பிற்கு இடையிலான ரயில் போக்குவரத்து முன்னெடுக்கப்பட மாட்டாது என ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

திருத்தப் பணிகளை முன்னிட்டு நேற்று (04) காலை முதல் குறித்த ரயில் பாதையில், ரயில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும் கொழும்பு முதல் கட்டுநாயக்க வரையிலும் நீர்கொழும்பிலிருந்து புத்தளம் மற்றும் சிலாபம் வரையிலான ரயில் சேவைகள் வழமைப் போன்று இடம்பெறும் எனவும் ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் குறிப்பிட்டுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்