தொடரும் வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டங்கள்

தொடரும் வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டங்கள்

எழுத்தாளர் Staff Writer

05 Mar, 2017 | 7:11 pm

வடக்கு கிழக்கின் சில பகுதிகளில், வேலையற்ற பட்டதாரிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர்.

யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த வேலையற்ற பட்டதாரிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

வட மாகாண வேலையற்ற பட்டதாரிகள் யாழ். மாவட்ட செயலகம் முன்பாக சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் 13 ஆவது நாளாகவும் இன்று சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதேவேளை அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் காரைதீவு சுகாதார அலுவலகத்திற்கு அருகில் தொடர்ந்தும் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் திருகோணமலை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள், ஆளுநர் செயலகத்திற்கு முன்பாக நான்காவது நாளாகவும் கவனயீர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்