ஜனாதிபதி நாளை இந்தோனேஷியாவிற்கு விஜயம்

ஜனாதிபதி நாளை இந்தோனேஷியாவிற்கு விஜயம்

எழுத்தாளர் Staff Writer

05 Mar, 2017 | 7:40 pm

இந்து சமுத்திர பிராந்திய நாடுகளின் அரச தலைவர்கள் மாநாடு இந்தோனேஷிய தலைநகர் ஜகர்த்தாவில் இன்று ஆரம்பமானது.

இந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை (06) இந்தோனேஷியாவிற்கு புறப்பட்டுச் செல்லவுள்ளார்.

இதேவேளை இந்து சமுத்திர வலய நாடுகளின் அமைச்சர்களுக்கான மாநாடு இந்தோனேஷியாவின் ஜகார்த்தாவில் நடைபெறவுள்ளது.

இந்த மாநாட்டில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இலங்கை சார்பில் பங்கேற்கவுள்ளார்.

மாநாட்டில் 21 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொள்கின்றமை குறிப்பிடத்தக்கது

சமுத்திரவியல் பாதுகாப்பு , வர்த்தகம் மற்றும் முதலீட்டு வாய்ப்புக்கள் , மீன்பிடி நடவடிக்கைகளின் முகாமைத்துவம், அனர்த்தங்களை எதிர்நோக்குதல், தொழில்நுட்ப ஒத்துழைப்பு மற்றும் சுற்றுலா ,கலாசார துறை குறித்து இந்த மாநாட்டில் அவதானம் வெலுத்தப்படவுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்