காணி சீர்திருத்த ஆணைக்குழு பணிப்பாளர் மீது துப்பாக்கிப் பிரயோகம்: பொலிஸார் தொடர்ந்தும் விசாரணை

காணி சீர்திருத்த ஆணைக்குழு பணிப்பாளர் மீது துப்பாக்கிப் பிரயோகம்: பொலிஸார் தொடர்ந்தும் விசாரணை

எழுத்தாளர் Staff Writer

05 Mar, 2017 | 7:27 pm

காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் மட்டக்களப்பு மாவட்ட ஆணையாளர் நேசக்குமார் விமல்ராஜ் மீதான துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பில் பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மட்டக்களப்பு களுதாவளை பகுதியில் கடந்த மாதம் 22 ஆம் திகதி அடையாளம் தெரியாத நபர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் நேசகுமார் விமல்ராஜ் காயமடைந்தார்.

துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான நேசக்குமார் விமல்ராஜுக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றது.

சம்பவம் தொடர்பில் பலரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ள போதிலும் இதுவரை சந்தேகநபர்கள் எவரும் கைது செய்யப்பட்டவில்லை என பொலிஸார் குறிப்பிட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பில் அண்மையில் ஒருவர் கைது செய்யப்பட்டு விசாரணைகளின் பின்னர் நீதிமன்ற அனுமதியுடன் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சம்பவம் இடம்பெற்று இன்றுடன் 11 நாட்கள்….

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்