ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு மேலும் கால அவகாசம் வழங்கக்கூடாது என வலியுறுத்தல்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு மேலும் கால அவகாசம் வழங்கக்கூடாது என வலியுறுத்தல்

எழுத்தாளர் Staff Writer

05 Mar, 2017 | 8:16 pm

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு மேலும் கால அவகாசம் வழங்குவது தொடர்பில் அரசியல் மேடையில் அதிகளவில் பேசப்படுகின்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் கால அவகாசம் வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளனர்.

எனினும், கூட்டமைப்பின் பெரும்பாலான உறுப்பினர்கள், இலங்கைக்கு மீண்டும் கால அவகாசத்தை வழங்க வேண்டாம் என வலியுறுத்தும் கடிதத்தை ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 16 பாராளுமன்ற உறுப்பினர்களில் 11 பேர், கால அவகாசம் வழங்கும் முயற்சிக்கு தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், ஊடகப் பேச்சாளர் எம்.ஏ சுமந்திரன், மாவை சேனாதிராஜா, ஈ.சரவணபவன், க.துரைரெட்ணசிங்கம் ஆகியோரைத் தவிர்ந்த ஏனைய அனைத்து உறுப்பினர்களும் கால அவகாசம் வழங்கக்கூடாது என வலியுறுத்தியுள்ளனர்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ள வேண்டுகோள் கடிதத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் நால்வரும், பொது அமைப்புக்கள் பலவற்றின் பிரதிநிதிகளும் கைச்சாத்திட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்