இலங்கை கிரிக்கெட் முகாமையாளர் என்ற புதிய பதவிக்கு அசங்க குருசிங்க நியமனம்

இலங்கை கிரிக்கெட் முகாமையாளர் என்ற புதிய பதவிக்கு அசங்க குருசிங்க நியமனம்

எழுத்தாளர் Staff Writer

05 Mar, 2017 | 10:03 pm

இலங்கை கிரிக்கெட் முகாமையாளர் என்ற புதிய பதவியொன்றை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

1996 ஆம் ஆண்டு உலகக்கிண்ணத்தை வென்ற இலங்கை அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக மிளிர்ந்த அசங்க குருசிங்கவுக்கு இந்த புதிய பதவி வழங்கப்பட்டுள்ளது.

1990 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் இலங்கை அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக மிளிர்ந்த அசங்க குருசிங்க 1996 ஆம் ஆண்டு உலகக்கிண்ண போட்டிகளில் இலங்கை அணி, சம்பியனாவதற்கு முக்கிய காரணமாக விளங்கியவர்.

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அதிசிறப்பான ஆற்றல்களை வெளிப்படுத்திய குருசிங்க 41 டெஸ்ட் போட்டிகளிலும் , 147 ஒருநாள் சர்வதேசக் கிரிக்கெட் போட்டிகளிலும் இலங்கை அணிக்காக விளையாடியுள்ளார்.

இன்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் முகாமையாளராக செயற்படவுள்ளமை தொடர்பில் குருசிங்க கருத்து வெளியிட்டார்.

[quote]இலங்கை அணியுடன் மீண்டும் இணைந்து செயற்படவுள்ளமை அதிக மகிழ்ச்சியளிக்கின்றது.இந்த பதவியை எனக்கு தந்தமைக்காக இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவருக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.2019 ஆம் ஆண்டு உலகக்கிண்ண போட்டிகளை முன்னிலையாகக் கொண்டு விளையாடி வருகின்ற இளம் இலங்கை அணி, சிறப்பான பெறுபேறுகளை பெற முடியும். இலங்கை கிரிக்கெட் அணிக்கு நான் கடமைப்பட்டிருக்கின்றேன்.[/quote]

அசங்க குருசிங்கவுக்கு இந்த பதிவி வழங்கப்பட்டமை தொடர்பில இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் திலங்க சுமதிபால கருத்து வெளியிட்டார்.

[quote]இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தை மறுசீரமைக்கும் ஒரு அங்கமாக அசங்க குருசிங்கவுக்கு இந்த முகாமையாளர பதவி வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த பதவியின் பொறுப்பினை அசங்க குருசிங்க உணர்ந்து செயற்படுவார் என நினைக்கின்றேன் . இலங்கை கிரிக்கெட் அணியை அசங்க குருசிங்க வலுவான அணியாக கட்டமைப்பார் எனறும் நினைக்கின்றேன்.[/quote]

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்