அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட தமிழக மீனவர்கள் 24 பேர் கைது

அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட தமிழக மீனவர்கள் 24 பேர் கைது

எழுத்தாளர் Staff Writer

05 Mar, 2017 | 4:34 pm

நாட்டின் கடல் எல்லையில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட தமிழக மீனவர்கள் 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நெடுந்தீவு வடக்கு கடற்பரப்பில் இரண்டு படகுகளுடன் 09 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படைப் பேச்சாளர் கெப்டன் சமிந்த வலாகுலகே தெரிவித்தார்.

அத்துடன் தலைமன்னார் கடற்பரப்பில் 15 மீனவர்கள் கைது செய்யப்ப்டடுள்ளனர்.

மீனவர்களின் 2 படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் குறிப்பிட்டார்.

கைது செய்யப்பட்டுள்ள 24 மீனவர்களையும் கடற்றொழில் திணைக்களத்திடன் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

நேற்று முன்தினம் (03) இரவு திருகோணமலை கடற்பரப்பில் 8 மீனவர்கள் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தமிழக மீனவர்கள் தொடர்ந்தும் கைது செய்யப்படுவதால் கச்சத்தீவு திருவிழாவை புறக்கணிக்கவுள்ளதாக இந்திய மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கை கடற்படையினரால் மீனவர்கள் தொடர்ந்தும் கைது செய்யப்படுவதை கண்டித்து தமிழக மீனவர்கள் நேற்றைய தினம் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவளை சட்டவிரோதமான முறையில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட உள்ளூர் மீனவர்கள் 8 பேர் நிலாவெளி கடற்பரப்பிற்கு அருகில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த மீனர்களுடன் அவர்களின் மீன்பிடி படகும் கைப்பற்றப்பட்டதாக கடற்படையின் ஊடகப் பேச்சாளர் லெப்டினன் கமாண்டர் சமிந்த வலாகுலுகே குறிப்பிட்டார்.

அத்துடன் இந்த மீனவர்களிடமிருந்து நீர்மூழ்கி உபகரணங்களையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

மேலதிக விசாரணையின் பொருட்டு மீன்பிடி உபகரணங்களுடன் மீனவர்களை கடற்றொழில் திணைக்கள உத்தியோகத்தர்களிடம் ஒப்படைத்துள்ளதாக கடற்படையின் ஊடகப் பேச்சாளர் மேலும் கூறினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்